Publisher's Synopsis
கடவுள் இருக்கிறார்!
கடவுளுக்குத் தெரியும்!
கடவுள் விட்ட வழிப்படி நடக்கட்டும்!
கடவுளுக்குப் பொதுவாக நட!
கடவுள் சாட்சியாகச் சொல்கிறேன்!
கடவுள் கைவிடமாட்டார்!
கடவுளின்மீது பாரத்தைப் போடு!
***
கடவுளைக் கண்டவர் இவர்-பெரிய ஞானி-மூடுடா வாயை!
கடவுளா பொறுப்பாளி, நீ செய்கிற தவறுக்கெல்லாம்?
கடவுளா கொடுத்தார் -கொள்ளை அடித்துவிட்டு கடவுளையா சாட்சிக்கு இழுக்கிறாய்!
கடவுளையே நம்பிக்கொண்டுகிடடா-காரியம் நடந்துவிடும்-மூடா, உன் கடமையைச் சரியாகச் செய்யாமே, கடவுளைக் கூப்பிடறயா, எதற்கு எடுத்தாலும்!
கடவுள் காப்பாற்றுவார் போடா-ஏன் என் எதிரே பல்லைக் காட்டிகிட்டு நிற்கவேணும்-போ, போ-கடவுளைக் கேளுதாச்சொல்லி-தருவார்-போ.
கடவுள் எப்படித்தான் இந்த அக்ரமத்தைப் பொறுத்துக்கொண்டாரோ தெரியவில்லை.
கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று துளியாவது பயந்தா நடக்கிறான், அந்தப் பாவி.
கடவுள்கூடத்தான் பயப்படுகிறார், இப்படிப்பட்டவர்களிடம்.
கடவுள் என்ன செய்துவிட்டார் அவனை-கண்ணைக் குருடாக்கிவிட்டாரா-கைகாலை ஒடித்துவிட்டாரா-கொழுத்துத்தான் கிடக்கிறான்.
கடவுள் கொடுத்தார்னுதான் 'ஜம்பம்' பேசுகிறான், அந்தக் கள்ளன்.
கடவுள், அவன் பக்கமா இருப்பது-அடுக்குமா?
கடவுள் கண் பார்த்தா, நமக்கா இந்தக் கஷ்டம் வரும்?
***
கடவுளே! உனக்குக் கண்ணில்லையா?
கடவுள் இருந்தால், இப்படியா செய்வார்?
கடவுள், கடவுள் என்று நாம்தான் கதறுகிறோம்-காரியவாதி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துதான் வேலை செய்கிறான்-கடைசியிலே அவன் பக்கம்தான் கடவுள் சேர்ந்துகொள்கிறார்.
***