Publisher's Synopsis
பிறக்கும் போதே எவரும் புகழுடன் பிறப்பதில்லை. முயற்சியால், அறிவால், ஒழுக்கத்தால், தெய்வ பக்தியால், தேச பக்தியால், தன்னம்பிக்கையால் படிப்படியாக முன்னேறி உலகப் புகழ் பெற்றவர் பலர். அவர்களில் இருபது பெரியோர்களின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகளை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கூற முயன்றேன். பெரியோரின் பிள்ளைப்பருவ நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை; பயனுள்ளவை. அவற்றைத் தெரிந்து கொள்வதால், நமக்குத் தன்னம்பிக்கை ஏற்படுகிறது; தாழ்வுமனப்பான்மை நீங்குகிறது; மேலும் மேலும் உயரவேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. இன்று சிறுவராயிருப்பவர்களில் பலர், வருங்காலத்தில் பெரிய மனிதர்களாகத் திகழவேண்டும். அவர்களால் நாடும் உலகும் நற்பயன் பெறவேண்டும். இதுவே என் ஆசை. எல்லாருடைய ஆசையும் இதுவே. இந்நூல் நல்ல முறையில் உருவாகப் பெரிதும் உதவிய புலவர் திரு. தணிகை உலகநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.