Publisher's Synopsis
தித்திக்கும் இந்த முத்திரைப் பாடலை! முதற்பாடலாகக் கொண்டு, நண்பர் வள்ளியப்பா அவர்கள் நேரு தந்த பொம்மை என்னும் அருமையான நூலைப் படைத்திருக்கிறார். திரு அழ. வள்ளியப்பா அவர்கள் குழந்தை இலக்கிய உலகின் ஒளி விளக்கு. வாழ்நாளெல்லாம் குழந்தைகளுக்காகவே எழுத்தாலும் பேச்சாலும் அரும்பாடுபட்டு வருபவர்; பிறரையும் குழந்தைகளுக்காக எழுத வைத்துக் குழந்தை எழுத்தாளர்களின் உற்பத்திச் சாலையாக விளங்குபவர். ஒருசமயம் நேரு அவர்கள் பொம்மைக்காரனிடம் இருந்த எல்லாப்பொம்மைகளையும் விலைக்கு வாங்கிக் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சியை அமுதக் கவிதைகளால் சித்திரித்த கவிஞர் நேரு தந்த பொம்மை என்னும் தலைப்பையே இந்தப் புத்தகத்துக்குச் சூட்டியுள்ளார். இந்நூல் நேருவின் வாழ்க்கையில் நேர்ந்த சுவையான நிகழ்ச்சிகளையும் அவருடைய அருமை பெருமைகளையும் எடுத்துக் கூறும் கவிதை மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு பூஞ்சோலை. பொன் குடத்துக்குப் பொட்டு வேண்டுமா? இந்த அருமையான நூலுக்கு அணிந்துரை வேண்டுமா?