Publisher's Synopsis
நமக்கு முன் எத்தனை விதமான பெண்மணிகள் இந்தப் பூமியில் தோன்றி அறிவிலும் பக்தியிலும் சிறந்து விளங்கி வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்! பக்தியில் ஆண் பக்தி, பெண் பக்தி என்று இல்லையென்றாலும் எல்லாருக்கும் தெரிந்த பெண்கள், தெரியாத கோணங்கள், வித்யாசமான நடை என்று ஒரு புது உத்தியோடு, நான் எழுதிய "பிரமிக்க வைக்கும் பெண்மணிகள்" என்ற தொடர்தான் "அக்னி புத்ரி" என்ற பெயர் தாங்கி, உங்கள் கைகளில் தவழ்கிறது.